கொழும்பில் அமைதி போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக மாணவர்கள்(Photos)
கொழும்பு-புதுக்கடை பிரதான வீதியின் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியதினால் தற்போது அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து மாணவ ஒன்றியத்தின் உறுப்பினர்களான களும் மற்றும் டில்ஷான் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றார்கள்.
எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இந்த போராடடம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை பொராட்டம் இடம்பெறும் பகுதியில், பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராடடம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு குணசிங்கபுர நீதிமன்றத்திற்கு செல்கின்ற பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.









வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri