கொழும்பில் கல்வி அமைச்சிற்குள் நுழைய முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்! கண்ணீர்ப்புகை பிரயோகம் (Video)
கொழும்பில் கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மகாபொல புலமைப்பரிசில் வழங்கப்படாமையை சுட்டிக்காட்டியும் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையை கண்டித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு கலகத்தடுப்பு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர்ப்புகை பிரயோகம்
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







