யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மரணம்
மூன்று தினங்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது 23) எனும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவியின் குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri