ஊசியால் பல்கலைக்கழக மாணவன் மரணம்: மறுக்கும் வைத்தியசாலை
காலியில் தடுப்பூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இளைஞன் மரணம்
இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஊசியை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஹரகம வைத்தியசாலை
இது தொடர்பில் மஹரகம வைத்தியசாலையிடம் வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri