பேராதனை பல்கலைக்கழகம் தொடர்பில் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்
பேராதனை பல்கலைக்கழகத்தின் உடன்படிக்கைகள் மற்றும் கணக்குகளை மீறிய பேராசிரியர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் 111 பேரிடம் அறவிடப்பட வேண்டிய 131,7 71,454 ரூபா பணத்தை அறவிடுவதற்கு உரிய முறை மேற்கொள்ளப்படவில்லை என தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகம் தொடர்பான 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர், குறித்த தொகையை அறவிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான நடவடிக்கை
இதற்கமைய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் ஊடாக அந்த தொகையை அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் உடன்படிக்கைகளை மீறிய பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட ரீதியான
நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவுக்கு தகவல்
அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
