'டித்வா'வில் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலையின் கணினி பிரிவு ஆரம்பம்
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கணினி ஆய்வகம் சீரமைக்கப்பட்டு கடந்த 19 ஆம் திகதி மீள திறந்து வைக்கப்பட்டது.
அனர்த்தத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், முழுமையான வசதிகள் கொண்ட இரண்டு கணினி ஆய்வகங்கள் முற்றிலும் சேதமடைந்து, அங்கிருந்த கணினிகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளான.
மீளமைப்பு பணிகள்
பல்கலைக்கழக மாணவர்களின் விரிவுரைகள், ஆராய்ச்சிகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகளுக்கு பெரும் பங்காற்றியது.இந்த ஆய்வகங்கள் சேதமடைந்ததால் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த அத்தியாவசிய கல்வி வசதிகளை விரைவாக மீண்டும் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, EWIS நிறுவனம் தனது ஆதரவை வழங்க முன்வந்தது.

அதன் அடிப்படையில், 100 புதிய லேப்டாப் கணினிகள் முகாமைத்துவ பீடத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேலும் எளிதாக்கும் வகையில் 85 அங்குல அளவிலான பெரிய ஸ்மார்ட் திரையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.