யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல் நிகழ்வு (Photos)
யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வ பொங்கல் இடம்பெற்றுள்ளது.
கலாச்சார பாரம்பரிய விளையாட்டு
பல்கலைக்கழக மாணவர்களால் பஜனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் ஆலய முன்றலில் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுகளை தொடர்ந்து சிவபூமி மடத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன் பொழுது பிரதம விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கௌரவ
விருந்தினராக செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், சிறப்பு விருந்தினர் ரில்கோ
சிற்றி கொட்டல் உரிமையாளர் திலகராஜ்யும் கலந்து கொண்டதோடு 98 வயதான நகுலேஸ்வர
ஆலயத்தின் நகுலேஸ்வர குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
