யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகின்றார்.
இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்களின் சார்பில் அழைக்கப்பட்ட பெற்றோர் - விருந்தினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்றாம் நாள் பட்டமளிப்பு விழா

நேற்று முன்தினம் (06.10.2022) ஆம் திகதி ஆரம்பமான பட்டமளிப்பு விழா மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெற்று வருகின்றது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.
இன்று மூன்றாம் நாள் இடம்பெற்று வருகின்ற ஏழாவது, எட்டாவது அமர்வுகளில் 432 பேர்
பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam