யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அவரது தொலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் வந்துள்ளனர்.
விடுதியில் பெற்றோர் விசாரித்த போது, மாணவி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
