கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தனியான பல்கலைக்கழகம்
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்குத் தனி பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியான பல்கலைக்கழகம்
அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வருடம் தோறும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் மேற்படி நாடாளுமன்ற குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan