பல்கலைக்கழக கல்வி சமூக கட்டுமானத்துக்கு களம் அமைக்க வேண்டும்!
பட்டச் சான்றிதழ்களையும், தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் பல்கலைக்கழகக் கல்வி அமைந்தவிடக் கூடாது என வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
லண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும், பிரித்தானிய இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவரும், சமூக சேவையாளருமான தொழிலதிபர் முருகுப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் நிதிப்பங்களிப்பில், மிகை வறுமையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 13 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா வீதம் முதற்கட்ட நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரித்தானியாவிலிருந்து வருகைதந்துள்ள தொழிலதிபரும், சமூக சேவையாளருமாகிய முருகுப்பிள்ளை கோபாலகிருஷ்ணன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், உப தவிசாளர் புஸ்பநாதன் சிவகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், துணுக்காய் பிரதேச செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் பரமானந்தம், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் இராசையா யோகநாதன், தொழிலதிபரும் கட்சியின் செயற்பாட்டாளருமான யோகேஸ்வரன் நிரோயன் ஆகியோரோடு பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
