இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கும் கோரிக்கை
இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்த கோரிக்கையை அதிகாரபூர்வமாக முன்வைக்க உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உதவிக் கோரல்

இலங்கைக்கு அவசர உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான வீ.ஷாரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பின் இலங்கைக்கான பிரதி பிரதிநிதி எம்.ஹார்விக் ஆகியோருடன் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

இந்த கலந்துரையாடலில் உணவு தட்டுப்பாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரசாயன உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் விவசாயத்துறை பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam