ஐ.தே.க. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மனுக்களை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமது கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதைத் தடுத்து, உத்தரவு பிறப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
விஜித் மலல்கொட, எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர் குழாமே இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
குறித்த மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியப் பிரமாணங்கள் உயர்நீதிமன்ற விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைப் பரிசீலனை செய்த நீதியரசர் குழாம், மனுக்களை விசாரணைக்கு
எடுத்து கொள்ளாமல் நிராகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam