ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! - நீதி அமைச்சர் விளக்கம்

United Nations Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka OHCHR
By Rakesh Oct 07, 2022 09:54 PM GMT
Report

ஐ.நாவின் புதிய தீர்மானம் காரணமாக இலங்கை பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது என்று நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"நாடு என்ற ரீதியில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கொள்கை மாற்றம் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான முக்கிய காரணமாகும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் நீதி அமைச்சர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! - நீதி அமைச்சர் விளக்கம் | United Nation Sri Lanka Human Rights Session 51 Un

ஜனநாயக சீர்திருத்தங்கள்

"வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவில் ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.

ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! - நீதி அமைச்சர் விளக்கம் | United Nation Sri Lanka Human Rights Session 51 Un

புதிய தீர்மானத்தால் நாடு பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தால் நாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் பாதிக்கப்படலாம்.

இலங்கை தன்னிறைவை அடைந்த நாடாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை

எனினும், இலங்கையிலிருந்து 70 வீதமான பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைத்தாலும், நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாத அரசியலால், சர்வதேச நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் மேலும் தாமதமடையக்கூடும் என்றார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US