அமெரிக்காவில் விமான சக்கரத்தில் இருந்து மனித உடலம் மீட்பு
அமெரிக்க விமானம் ஒன்றின் சக்கரத்தில் இருந்து மனித உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹவாய் தீவான மௌயில் விமானம் ஒன்று தரையிறங்கிய பின்னர், விமானத்தின் சக்கரமொன்றில் ( wheel well ) இருந்து இறந்த மனித உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
சர்வதேச விமான நிலையம்
அமெரிக்காவின் சிக்காக்கோ பிராந்திய சர்வதேச விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்பட்டு சென்ற விமானத்தில் இருந்தே இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளது.
விமானத்தின் தரையிறங்கும் கியர் உள்ள பெட்டிகளில் ஒன்றில் இருந்து இந்த உடலம் மீட்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இறந்தவர் பற்றிய கூடுதல் விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. விமானம் ஒன்றில் சக்கர இருப்பை, விமானத்திற்கு வெளியே இருந்து மட்டுமே அணுக முடியும்.
இந்தநிலையில், எவ்வாறு குறித்த சக்கர இருப்புக்கு சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சக்கர பகுதி
பொதுவாக விமானங்களில், அழுத்தம் இல்லாத சக்கர பகுதியில் மறை 80 பாகை செல்சியஸ் வரையான குளிரை எதிர்கொள்ள நேரிடும்;, அதே போல் ஒக்ஸிஜன் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளக்கூடும்.
பெரும்பாலான சக்கர இருப்புக்களை கொண்ட விமானங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், சிலர் அந்த நிலைமைகளில் இருந்து தப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு பாரிஸில் அல்ஜீரிய விமான நிறுவனத்தின் விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார் 2022 ஜனவரி 2022 இல், ஆப்பிரிக்காவிலிருந்து அம்ஸ்டர்டாமின் சிபோல் விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தின் முன்பக்கத்தின் கீழ் சக்கரப் பகுதியில் ஒருவர் உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் விமானங்களில் பயணிப்போர் இவ்வாறு ஆபத்தான வழிகளில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |