நாடளாவிய ரீதியில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(Photo)
முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் நடைமுறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று செல்கின்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள் சங்கத்தின் நிறைவேற்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான, முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் சில கிராமங்களை சேர்ந்த மக்களும் எரிபொருளை வரிசையிலிருந்து பெற்று வருகின்றனர்.

எவ்வித குழப்பங்களுமின்றி மக்கள் எரிபொருள் பெற்று வரும் நிலையில், மாங்குளம் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

இதேவேளை, இன்றையதினம் (01) குறித்த எரிபொருள் நிரப்பு
நிலையத்தில், விவசாயம்
திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,
உள்ளிட்ட பல திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்
உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan