இலங்கை பல்கலைக்கழக மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மொஸ்கோவிற்கான முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர்குரூப் கப்டன் எஸ்.ஆர். ஜயரத்னவின் மகன் தம்சித் ஜயரத்ன தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு உடனடியாக மருத்துவப் பீடத்தில் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தம்சித் ஜயரத்ன தனது தந்தையுடன் மொஸ்கோவில் தங்கியிருந்தபோது, அங்குள்ள இந்தியப் பாடசாலை ஒன்றில், இலங்கையின் உயர் தரத்துக்கு நிகரான, CBSE பாடத்திட்டத்தில் பயின்று அனைத்து பாடங்களிலும் A' சித்தி பெற்றார்.
இதனையடுத்து வெளிநாட்டு மாணவர் பிரிவின் கீழ் அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தபோது, அவர் வெளிநாட்டில் 3 ஆண்டுகள் கல்வி பயிலவில்லை எனக்கூறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
அடிப்படை உரிமை
இந்த நிலையில், தமது தந்தை மொஸ்கோவில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருந்தார்.
எனவே, தந்தையின் பணிக்காலம் குறைவாக இருக்கும்போது, மகன் மட்டும் 3 ஆண்டுகள் அங்கு தங்கியிருப்பது சாத்தியமற்றது என மனுதாரரான தம்சித் ஜயரத்ன வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர உள்ளிட்ட நீதியரசர்கள் குழு வழங்கிய ஒருமனதான தீர்ப்பில், பாதுகாப்பு இணைப்பாளர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் 3 ஆண்டுகள் கல்வி பயில வேண்டும் என்ற கட்டாய விதி, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அரசாங்கத்தினால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு இந்த விதிமுறை பாரபட்சமாக அமைகிறது.

இந்த நிலையில், முறையான புரிதல் இன்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவு முறையற்றது என நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
எனவே,மனுதாரரான தம்சித் ஜயரத்னவை உடனடியாக ஒரு மருத்துவப் பீடத்தில் அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri