மத வெறுப்பை நிராகரிக்கும் தீர்மானம்: ஜெனீவா பேரவையில் நிறைவேற்றம்
புனித குர்ஆனை இழிவுபடுத்தும் சமீபகால மற்றும் திட்டமிட்ட செயல்கள் உட்பட, மத வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் எந்தவொரு வெளிப்பாட்டையும் வன்மையாக நிராகரிக்கும் தீர்மானம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நிறைவேற்றப்பட்டது.
“பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பை எதிர்ப்பது” என்ற இந்த தீர்மானத்துக்கு 28 ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும், 7 பேர் வாக்களிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு இணை ஆதரவு வழங்கிய போதும் இலங்கையால் வாக்களிக்க முடியவில்லை எனவும் விவாதத்தின் போது தீர்மானத்தின் சார்பாக தலையிட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மதச் சின்ன பாதுகாப்பு
இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட கூட்டு கூட்டு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டிக்கும் அதே வேளையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) முன்முயற்சியானது மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விட மதச் சின்னங்களைப் பாதுகாப்பதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டது என்று அவர்கள் வாதிட்டனர்.
கடந்த மாதம் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் ஈராக் குடியேற்றவாசி ஒருவரால் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் முஸ்லீம் உலகம் முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியது.
இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் நாடுகள் மற்றும் சமூகங்களின் கோரிக்கைகளைத் தூண்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |