இலங்கையால் உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
2023 ஆகஸ்ட் இறுதி வரை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இன் கீழ் நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% ஐ இலங்கை நிறைவு செய்துள்ளது என்று வெரிடே ரிசர்ச் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டதிலிருந்து,எட்டு வருடங்களாக, தீர்மானத்தின் 61.1% உறுதிப்பாடுகள் ‘மோசமான’ அல்லது ‘இல்லை’ என்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், (1) பரந்த நிலைமாற்று நீதி செயல்முறைகளில் ஈடுபடுதல்; (2) காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல்; (3) இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல்; (4) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்துதல்; (5) வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களை குற்றமாக்குதல்; (6) மற்றும் (7) சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற 7 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் 2015 ஆம் ஆண்டு முதல் ‘மோசமான நிலையில் இருக்கும் சில முக்கிய
கடமைகளாக, பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்; (2)
ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், மத சிறுபான்மையினர் மற்றும்
சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள், (3) இந்தத்
தாக்குதல்களின் குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் (4) எதிர்காலத்தில் இதுபோன்ற
தாக்குதல்களைத் தடுப்பது போன்ற விடயங்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என
வெரிடே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
