ஐநா மனித உரிமைப் பேரவையின் யோசனையை இலங்கை நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆம் அமர்வுகளில் முன்வைக்க உத்தேசிக்கப்படவுள்ள யோசனையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில காரணிகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை பேரவையின் அமர்வுகள்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் இந்த மாதம் 11-ம் திகதி வரையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் இம்முறை நடைபெறுகின்றது.
இம்முறை 57 ஆம் அமர்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வுகள் தொடர்பில் வெளிவகார அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைவு திட்டத்தை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை தொடர்பில் 51/1 என்ற யோசனை திட்டம் ஒன்று முன்மொழிக்கப்பட உள்ளது.
வெளி சாட்சியங்கள் திரட்டும் இயந்திரத்திற்கான அதிகாரம் வழங்கப்பட போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பொறிமுறைமை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
