ஒட்டுசுட்டானில் திடீர் சோதனை: மூடப்பட்ட உணவகம்
ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு உணவுக்கடையும் மூடப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் ஒட்டுசுட்டான் சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன், நதிருசன் ஆகிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, உணவு கடையொன்றிலிருந்து 10kg ரொட்டி, றோல்ஸ் போன்ற மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடை சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்துள்ளதால் கடையை பூட்டி சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க இன்றிலிருந்து அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இல்லையேல் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







