மகிந்தவின் ஆதரவாளருக்கு கிடைத்த எதிர்பாராத தண்டனை
காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின் சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகமவுக்கு போராட்டகாரர்கள் எதிர்பாராத தண்டனையை வழங்கியுள்ளனர்.
போராட்டகார்கள், கஹந்தகமவின் ஆடைகளை அகற்றியுள்ளனர். மகிந்த கஹந்தகம, அலரி மாளிகைக்கு எதிரில் இன்று நடைபெற்ற மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் என கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.
இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் இணைந்து புரியாணி எமக்கு வேண்டாம், மகிந்தவே எமக்கு வேண்டும் என கோஷமிடுவதை காணக் கூடியதாக இருந்தது.
மகிந்த கஹந்தகம, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பதுடன் சுய தொழில் புரிவோரின் சம்மேளனம், பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பேருந்துகளில் வந்தவர்களை போராட்டகார்களால் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் வந்து பேருந்துகளும் தாக்கப்பட்டுள்ளன.
අරකිගෙ තාත්ත ට සලකලා හොදට pic.twitter.com/HZk8i1PNtA
— Senu_Kavi (@KaviSenu) May 9, 2022
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam