கையடக்க தொலைபேசி பாவனையை பாடசாலைகளில் இருந்து அகற்ற வேண்டும்: ஐ. நாவின் விசேட அறிவிப்பு
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது கையடக்க தொலைபேசி பாவனையை பாடசாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்கள் தொலைபேசிகளை திரையை நீண்ட நேரம் பார்ப்பதன் மூலம் அவர்களின் உணர்ச்சி ஸ்திரத்தன்மை முறிவு உட்பட பல காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகளைப் பார்ப்பது குழந்தைகளின் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது.
வகுப்பறையில் கற்பிக்கும் முறை
அதன்படி, பாடசாலைகளில் இருந்து கையடக்க தொலைபேசிகளை அகற்ற வேண்டும் என ஐநா அறிக்கை ஒன்றின் மூலம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
புதிய விடயங்கள் எப்போதும் சிறந்தவை அல்ல என்றும், கொள்கை வகுப்பாளர்கள் மேலும் சிந்திக்காமல் கல்வியில் "டிஜிட்டல் தொழில்நுட்பத்தை" பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.
கோவிட்-19 பருவத்தில் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பது பயனுள்ளதாக இருந்தாலும், வகுப்பறையில் கற்பிக்கும் முறையால் குழந்தைக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நெருங்கிய உறவு ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமானது.
எவ்வாறாயினும், இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, வகுப்பறையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
