வொலிவேரியன் கிராமத்தில் தூர்வாரப்படாத நீர்வடிகால் கான்கள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அம்பாறை - வொலிவேரியன் கிராமத்தில் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கும் காண்களை துப்பரவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் அதிகளவான கான்கள் தூர்வாரப்படாமல் இருக்கும் நிலையில், துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
இந்நிலையில், அப்பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இது குறித்து, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிற்கும் கிழக்கு மாகாணத்திற்கான மத்திய சுற்றாடல் அதிகார சபை, அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது நம்முடைய ஒவ்வொருவரின் கடமையாகும் எனும் தொனிப் பொருளின் அடிப்படையில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் வாய்ப்பு: உடன் வெளியேறுமாறு நாட்டின் சில பகுதிகளுக்கு அறிவுறுத்தல்
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri