திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள்
பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வெலிக்கடை புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கைதிகள் குழுவினர் நேற்று (11) வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
இடமாற்றம் செய்யப்பட்ட குற்றவாளிகள்
இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகள் குழுவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன், தெமட்டகொட சமிந்த, ஆர்மி சம்பத், மன்னா ரமேஷ், லொகு பெட்டி, வெலே சுதா,மிதிகம ருவான் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடுத்து வைப்பதற்கான நடவடிக்கை
பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிறையிலிருந்தே பல்வேறு முறைகேடுகளைச் செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை கடற்படை முகாமில் கட்டப்பட்டுள்ள வெலிக்கடை புதிய சிறையானது, சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளதுடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை முதல் தொகுதி கைதிகளாக தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri