கடுவலை பகுதியில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த உறுப்பினர் உயிரிழப்பு (Photo)
கடுவலை பிரதேசத்தில் கற்பாறை ஒன்றிலிருந்து வழுக்கி விழுந்து பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த துவான் சிரான் என்பவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மீது 13 பாரதூரமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அவர், தான் சில ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளதாக கூறியதை அடுத்து அவற்றை காட்டுவதற்காக விசேட அதிரடிப்படையினருடன் கடுவலை பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தப்பிச்செல்ல முயற்சி
அதன்போது கற்பாறையின் மேல் இருந்து விசேட அதிரடிப்படை வீரரொருவரை தள்ளிவிட்டுத் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார்.
இதனை தொடரந்து அவர் தப்பிச் செல்லும் போது தள்ளிவிடயப்பட்ட அதிரடிப்படை வீரரும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் அதுருகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் துவான் சிரான் உயிரிழந்துள்ளார். காயமடைந்த அதிரடிப்படை வீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
