பாதாள உலகக் குற்றவாளியான சமபோஷா கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் ‘சமபோஷா’ என்ற ‘மதுசங்க’ எனும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து தனித்தனி கொலை வழக்குகள்
சந்தேக நபர், பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பெரிய போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்கா’ என்று அழைக்கப்படும் கமகெதர சாரங்கா பிரதீப்பின் நெருங்கிய நண்பராவார்.

குறித்த சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்,
மேலும் அவரிடம் இருந்து 26.890 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர் ஐந்து தனித்தனி கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |