இலங்கையில் பாதாள உலக செயல்பாடுகளில் வீழ்ச்சி! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் பாதாள உலக செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காணமுடிந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பானந்துறை - பின்வத்த பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலஞ்சம், மிரட்டி பணம் பறித்தல், பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் மோசடி ஆகியவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது பாதுகாப்பு அமைச்சின் முக்கிய கடமை, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும்.
இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், காவல்துறையினர் கடமைகளை நியாயமாகவும், கடுமையாகவும் நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
