தென்னிலங்கையில் அண்ணன்-தங்கைக்கு கிடைத்த மோசமான அனுபவம்!
கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், பத்து வயது சிறுவனும் அவனது எட்டு வயது சகோதரியும் மூன்று ஆண்களால் மோசமான முறையில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிறுவர்களை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்திய, 22, 73 மற்றும் 63 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் கொஸ்கொட பொலிஸாரால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 22 வயதான இளைஞன், பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களில் ஒருவர் எனவும், வீட்டிற்கு விருந்தாளியாகவும் வருகை தந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை மற்ற இரண்டு ஆண்களும் அப்பகுதியில் வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் தாயார் வேலை நிமித்தம் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த போது சந்தேகநபர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பலாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
