தலதா மாளிகைக்கு மேல் ஆளில்லா விமானத்தை அனுப்பிய வெளிநாட்டவர் கைது
தலதா மாளிகைக்கு மேலாக ஆளில்லா விமானத்தை அனுப்பிய வெளிநாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட 25 வயதுடைய அமெரிக்கர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தின் மீது இன்று காலை குறித்த நபர் ஆளில்லா விமானத்தை செலுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன் பின்னர் கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த ஆளில்லா விமானத்தில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |