உணவை பெற்றுக்கொள்ள முடியவில்லை! தவறான முடிவொன்றை எடுத்த பெண்மணி
பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாது பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் நடந்துள்ளது.
அரநாயக்க பொலிஸ் பிரிவில் பொஸ்செல்ல, களுகல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான முதிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கணவருக்கு கிடைத்த வருமானம் நின்று போயுள்ளது
இந்த பெண் தனது வயோதிப கணவருடன் வாசித்து வந்ததுடன் இவர்களின் ஒரே மகள் றம்புக்கனை பிரதேசத்தில் வசித்து வருகிறார். இந்த பெண்மணியின் கணவர், மாந்திரீக வேலைகளை செய்து, சிறியளவில் பணத்தை சம்பாதித்து வந்துள்ளார்.
அண்மையில் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக நடக்க முடியாமல் போனதால், வருமானம் இல்லாமல் போயுள்ளது. இவர்கள் இருவருக்கும் முதியோர் கொடுப்பனவாக ஆயிரத்து 900 ரூபாவும் கமத்தொழிலாளர் ஓய்வூதியமாக ஆயிரத்து 950 ரூபாவும் என மொத்தமாக 3 ஆயிரத்து 850 ரூபா மாத்திரமே கிடைத்து வந்துள்ளது.
விஷ திரவத்தை அருந்தி தற்கொலை
பொருட்கள் விற்பனை செய்யப்படும் விலைக்கு அமைய அந்த பணத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என்பதால், பெண்மணி பல நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்றைய தினம் வீட்டில் இருந்த விஷ திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கணவர் கூறியுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
