தமிழைத் தவிர்க்கும் ஐ.நா! ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து
ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவிற்கு அழுத்தங்களை கொடுத்து ஒருபோதும் தீர்வினை பெற முடியாது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய உலக தமிழர் பேரமைப்பின் நிறுவனர் சுரேன் (Suren) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரச்சினைகளுக்கான தீர்வு என்னவெனில் ஆயுதப்போராட்டங்கள் மூலம் வெற்றியினை பெற வேண்டும்.இல்லாவிடின் பேச்சு வார்த்தை மூலம் தீர்வினை பெற வேண்டும்.
எனவே தான் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் அமைப்புக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தமையை நாங்கள் வரவேற்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
