பாலஸ்தீனம் மற்றும் இலங்கை தொடர்பில் ஐ.நா கவனஞ்செலுத்த வேண்டும்: ரிஷாட் பதியுதீன்
பாலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சை நேற்று (05.12.2023) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகஜர்
“ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பாலஸ்தீனின் அவல நிலை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடினோம்.
பாலஸ்தீன் – இஸ்ரேல் மோதலை உடன் நிறுத்தும் வகையில், ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மகஜர் உரியவர்களிடம் சென்றடைந்துள்ளதாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்காலத்தில் ஐ.நா.வின் ஆதரவு குறித்தும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்புப் பேச்சுக்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினோம்” என்று கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |