ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் கன்னி விக்னராஜா இலங்கைக்கு வருகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகி கன்னி விக்னராஜா இலங்கைக்க விஜயமாகவுள்ளார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 13 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான புதிய வழிகளை ஆராயும் நோக்கத்துடன் அவரின் இலங்கை பயணம் அமைகிறது. அத்துடன் கோவிட் பரவலின் பின்னர் பொருளாதாரத்தின் மீட்சி தொடர்பில் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.
தமது பயணத்தின்போது கன்னி விக்னராஜா உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகியுமான கன்னி விக்னராஜா இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகியுமாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.