நாட்டில் மீண்டும் இனப்படுகொலை நடக்காதவாறு இருக்க உத்தரவாதம் தேவை: சிவாஜிலிங்கம் (Video)

United Nations Sri Lankan Tamils Sri Lanka
By Theepan Sep 08, 2022 12:53 PM GMT
Report

ஐ.நா மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் கடந்த போதும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இன்று (08) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


”ஈழந்தமிழர்கள் என்ற ரீதியில் எங்களுக்குள்ளே ஒரு கருத்தொற்றுமை இருக்க வேண்டும்.

இலங்கையில் காணப்படும் தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும் கருத்தொற்றுமைக்கு வந்த காரணத்தினால் பிளவுப்படவில்லை” என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இனப்படுகொலை

நாட்டில் மீண்டும் இனப்படுகொலை நடக்காதவாறு இருக்க உத்தரவாதம் தேவை: சிவாஜிலிங்கம் (Video) | Un Human Rights Council Spoke Genocide

மேலும், ”நாட்டில் மீண்டும் இனப்படுகொலை நடக்காதவாறு இருக்க உத்தரவாதம் தேவை எனவும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார். 

”இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 52வது கூட்டத்தொடரில் இருக்கமான தீர்மானங்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதியைக்கோரி ஈழத்தமிழினம் போராடி வருகின்றது. முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஜெனிவாவில் எங்கள் பிரச்சினை இருந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் தரப்புகள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பிரதான மூன்று அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இலங்கை அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உட்பட்ட குற்றங்களைப் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஈடு செய் நீதியை பெறக்கூடிய விதத்திலும், இனப்படுகொலை மீண்டும் இடம்பெறாமல் இருக்க மீள நிகழாமை அடிப்படையிலும், ஐ.நா சபையின் கண்காணிப்பில் வடக்கு,கிழக்கு மாநிலத்தில் பொதுஜன வாக்கெடுப்பை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.

நாட்டில் மீண்டும் இனப்படுகொலை நடக்காதவாறு இருக்க உத்தரவாதம் தேவை: சிவாஜிலிங்கம் (Video) | Un Human Rights Council Spoke Genocide

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாலும் பொதுசன வாக்கெடுப்பை கோருவதை தவிர்த்து வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை பொதுவெளியில் இந்த கோரிக்கையை முன் வைக்கவில்லை.ரெலோ, புளொட் ஆகியன எங்களுடன் இணைந்து இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை.

இலங்கைக்குள் ஒரு போதும் அரசியல் தீர்வு கிடையாது. அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக கூறினாலும் ஒற்றையாட்சியை சுற்றிச் சுற்றி தான் இருக்குமே ஒழிய எங்களை நாங்கள் ஆளக்கூடிய ஒரு கௌரவமான தீர்வு கிடைக்காது.

பொதுஜன வாக்கெடுப்பு

ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழ் தரப்புகள் பொது உடன்பாட்டுக்கு வந்து பொதுஜன வாக்கெடுப்பை முன்வைப்பதன் ஊடாகவே அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும்.

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக மக்களும் இதனை நோக்கி நகர வேண்டும். சுதந்திர தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற சந்தர்ப்பம் புலம்பெயர் மக்களும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வாக்களிப்பிற்கு விடப்படவேண்டும்.

நாட்டில் மீண்டும் இனப்படுகொலை நடக்காதவாறு இருக்க உத்தரவாதம் தேவை: சிவாஜிலிங்கம் (Video) | Un Human Rights Council Spoke Genocide

இதனை மக்கள் இயக்கமாக வலியுறுத்தி மாவட்டம் மாவட்டமாக பேரணியாக செல்லக்கூடிய விதத்தில் செய்து முடிக்க வேண்டும். கட்சி பேதங்களை கடந்து அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருந்து பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினேன்.

குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்கா, இந்தியா,ஜப்பான்,அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனா நடவடிக்கையை எதிர்த்து ஈழத் தமிழர்கள் பிரச்சனையை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US