திருகோணமலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஆணையாளர்: போராட்டத்தில் மக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஆணையாளரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(25.06.2025) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மனுக்கள்
இதன்போது, கவனயீர்ப்பில் கலந்து கொண்டோரை மனித உரிமை உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ், ஆணையாளரின் இலங்கை வருகை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
