ஐ.நா. பொதுச்சபை மாநாட்டில் உலகத் தலைவர்ளுடன் கோட்டாபய முக்கிய பேச்சு!

Covid 19 United Nation Gotabhaya Rajapaksha
By Rakesh Sep 17, 2021 12:41 PM GMT
Report

நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அதேவேளை, அது தொடர்பில் முன்வைக்கப்படும் தவறான கருத்துக்களைச் சரி செய்வது தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

கோவிட் வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவருடன் முக்கிய பல விடயங்களை உள்ளடக்கிய பேச்சை முன்னெடுப்பார்.

அத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி, அந்த தலைவர்களுடன் முக்கியமான பேச்சுகளை முன்னெடுப்பார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இம்முறை ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பில் உரைகள் நடைபெறவுள்ளன. கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து தமது நாடுகளை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில் எமது நாடு தொடர்பில் நாம் சிறப்பான விடயங்களை முன்வைக்க முடியும். முக்கியமாக தடுப்பூசிகளை வழங்கும் செயற்பாடுகளில் முதல் பத்து நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற வகையில் இது நாம் பெற்றுக்கொண்டுள்ள பெரும் வெற்றியாகும் என்பதைக் குறிப்பிடலாம். நாட்டின் பொருளாதாரம், சமூக ரீதியில் அடைந்துள்ள வீழ்ச்சி ஆகியவற்றை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதியால் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

அதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பில் பல்வேறு நாடுகளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் இங்கு ஆராயப்படவுள்ளன.

அவற்றுக்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தால் அவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட அவர்களது உரிமைகள் மற்றும் எவ்வாறு அவற்றை சீர்செய்து கொள்வது என்பது தொடர்பில் பேசப்படவுள்ளன. எமது ஜனாதிபதிக்கு மிக முக்கியமான சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த காலங்களில் நாட்டில் மனித உரிமை சம்பந்தமான பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தெளிவுபடுத்தவும் முன் வைக்கப்படும் தவறான கருத்துக்களை சரி செய்வதற்கும் இந்தச் சந்தர்ப்பம் முக்கியமானதாகும்" - என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US