காசா போர் நிறுத்தம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காசாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் முறியக் கூடிய அபாயத்தினை கொண்டிருப்பதாக மத்திய கிழக்கு சமாதான முயற்சிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை இணைப்பாளர் ராமீஸ் அலொக்பாரோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் நிலைமைகளை தெளிவுபடுத்திய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்ட போதிலும் இஸ்ரேலிய படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்துவது போர் நிறுத்தத்தை அபாய நிலைக்கு இட்டுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்படுவதனை ஏற்றுக்காள்ள முடியாது என அவர் வலியுறத்தியுள்ளார். இந்த போர்நிறுத்தம் தொடர்ந்தும் முறியக்கூடிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் சந்தர்ப்பாக இந்த போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை நிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முழு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காசாவில் மனிதாபிமான உதவிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து விநியோகித்து வருவதாக கூறிய அலாக்பரோவ், அங்கு நிலவும் சூழல் இன்னும் மிக மோசமானதாக இருப்பதாக எச்சரித்தார்.
கடும் குளிர் காரணமாக இரண்டு வாரக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தை அவர் மனிதாபிமான நெருக்கடியின் ஒரு உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.
உயிர்காக்கும் உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமீஸ் அலொக்பாரோ வலியுறுத்தினார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri