அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும், அவரது அரசாங்கமும் மேற்கொண்டு வரும் திட்டத்தை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் சமூக மாற்றம்
வோல்கர் டர்க், நேற்று(26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டியுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பகுதி மக்களும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது வலுவான நம்பிக்கையை வைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri