இலங்கைக்கு அதிகமான தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டமைக்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
இலங்கையில் கோவிட் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக அதிகமான தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இன்று வரவேற்றுள்ளன.
கோவாக்ஸில் இருந்து முதல் தொகுதி தடுப்பூசிகளை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் டெனிஸ் சாய்பி, இது ஒரு சிறந்த செய்தி என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம், அதன் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி என்பன இணைந்து “டீம் ஐரோப்பா” இன் கீழ் 2.2 பில்லியன் யூரோக்களுக்கு மேல் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவக்ஸ் வசதியிலிருந்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் எஸ்ட்ரா செனெகா ஃ ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு முதல் தொகுதியாக கிடைத்துள்ளன

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
