தேசிய கீதத்தை தவறாக பாடி சர்ச்சையில் சிக்கிய உமாரா! முறைப்பாடு செய்ய நடவடிக்கை
தேசிய கீதத்தை தவறாக பாடியமை தொடர்பில் பாடகி உமார சிங்கவன்ச மீது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய மக்கள் முன்னணி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தவறாக பாடிய உமாரா
மேலும், தேசிய கீதம் அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை எனவும், அதன் எழுத்துக்களை மாற்றுவதற்கும் ஒரு எழுத்தைக்கூட, நாடாளுமன்றத்தின் 2/3 வாக்குகள் மற்றும் மக்கள் கருத்து அவசியம் எனவும் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
2023 லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழா நேற்றையதினம் இடம்பெற்ற போது போது பாடகி உமாரா சின்கவன்ச தேசிய கீதத்தை வித்தியாசமான இசையில் பாடியதுடன், முக்கியமான வார்த்தையை மாற்றி பாடியுள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |