இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலே! அநுர அரசை சாடும் சஜித் அணி
இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை இன்றியே வெற்றி பெற்றார்.
அதேபோன்று பெரும்பான்மை இன்றி உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்க முடியும் என்று எண்ணுகின்றார். அது தவறாகும். அதனைப் புரிந்து கொள்வதற்கு அவர் ஜூன் 2ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும்
2ஆம் திகதி வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி அநுரகுமார முன்னிலையில் இருக்கின்றாரா அல்லது பின்தள்ளப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும்.
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் ஜனாதிபதி அநுரவிடமிருந்து கிடைப்பதில்லை. இங்கு கிடைக்கப் பெறும் நேரடி வருமானத்தைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எனவே, அரசு நிதி ஒதுக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது. நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இந்தத் தேர்தல் சட்டத்தை உருவாக்கினார்.
நிறைவேற்று அதிகாரம் இல்லாவிட்டாலும் கிராமத்துக்கு அதிகாரம் காணப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.
கட்சித் தலைமையகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானம்
எனவே, உள்ளூராட்சி சபைகளையும் பெலவத்த அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் எடுக்க நினைத்தால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது.
கட்சித் தலைமையகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய நாம் செயற்படுவோம். மக்களால் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளில் நாம் ஆட்சியமைத்து மக்களுக்காகச் சேவையாற்றுவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
