உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தலாம்! அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன்; மீது படையெடுப்பதற்கான காரணத்தை புனையவும், எதிர்வரும் நாட்களில் தாக்குதல் நடத்தவும் ரஸ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இராணுவ நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கலாம் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
எனினும் ஒரு இராஜதந்திர தீர்வு இன்னும் சாத்தியமாகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். எனினும் இந்தக்கூற்றுக்கள் "ஆதாரமற்றவை" என்று ரஸ்யா கூறியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா பதற்றத்தை ஏற்படுத்துவதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி, ரஸ்யா, தவறான குற்றச்சாட்டின் கீழ் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமைக்கான ஆயத்தமாவதாக கூறினார்
இதேவேளை அமெரிக்க ராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உரையாற்றும்போது ரஸ்யா அத்தகைய நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பதில் தாக்குதல்களுக்காக ரஸ்யா என்ன காரணங்களை கூறும் என்பது தெளிவாகத் தெரியவில்லை,
எனினும் ரஸ்யாவுக்குள் பயங்கரவாத குண்டுவெடிப்பு, பொதுமக்களுக்கு எதிரான ஒரு ட்ரோன் தாக்குதல் போன்றவற்றை ரஸ்யா புனையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் யுக்ரேனியப் படைகள் எறிகனை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்கள் சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



