ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம்
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் இடம்பெறும் ரஷ்யத் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வார்ப்பாட்டம் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரஷ்ய வன்முறையின் அதிகரிப்பு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்குமாறும் பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளதுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் பொலிஸார் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.