உள்ளூர் ஏவுகணையைக் கொண்டு ரஷ்யப் போர் வாகனங்களை துவம்சம் செய்யும் உக்ரைன் வீரர்
உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா வழங்கிய நவீன ஹோவிற்சர் எனும் ஆயுதங்களை உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
அதற்கான பயிற்சியை எதிர்பார்த்ததைவிட அவர்கள் மிக சீக்கிரமாக முடித்துவிட்டதாக அமெரிக்கப் பயிற்சியாளர்கள் பாராட்டியுள்ளார்கள்.
போர் வாகனங்களைத் துவம்சம் செய்யும் காட்சி
Ukrainian Corsar Anti-Tank Guided Missile strikes on a Russian column.#Ukraine #UkraineRussiaWar #UkraineWar #war #UkraineUnderAttack #Russia #Ukrainian #Russian #Donbas #Mariupol @Ukraine pic.twitter.com/QbD0b5I8nT
— Movie Xen (@MovieXen) June 7, 2022
உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் போர் வாகனங்களைத் துவம்சம் செய்யும் காட்சிகள் அவ்வப்போது ட்விட்டரில் பகிரப்படுவதுண்டு.
அவ்வகையில், உக்ரைன் வீரர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட The RK-3 ’Corsar’ என்னும் ஏவுகணையைக் கொண்டு ரஷ்யப் போர் வாகனங்களைத் தாக்கிச் சிதறடிக்கும் காணொளி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீரர் தன் கையில் வைத்துள்ள ராக்கெட் லாஞ்சர் ஒன்றின் மூலம் அந்த
ஏவுகணையை ஏவ, அது மிகச்சரியாக ரஷ்யப் போர் வாகனங்களை வெடித்துச் சிதறச்
செய்வதை வெளியாகியுள்ள காணொளியில் காணலாம்.