செவெரோடோனெட்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கான போரின் போது உக்ரேனிய ஆயுதப்படை பிரிவுகள் முக்கியமான இழப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரிவுகளில் 90 விகிதம் வரை இழப்புகளை சந்தித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. டெலிகிராமில் ஒரு பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வாங்கும் ரஷ்யா
சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் மறுபுறத்தில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தின் திசையில் உக்ரேனிய அலகுகள் பின்வாங்கி வருவதாகக் கூறுகிறது. அது எத்தனை அலகுகளைக் குறிக்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக உக்ரேனிய பிராந்திய ஆளுநர், ஒரு கட்டத்தில் நகரத்தின் 70 விகித பகுதியை கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்களை உக்ரேனியப் படைகள் ஓரளவு பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் தெரிவித்தார்.