கைத்துப்பாக்கியுடன் சுற்றிதிரியும் உக்ரைன் ஜனாதிபதி! வெளியான காரணம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கியொன்றினை வைத்துக்கொண்டு சுற்றிதிரிவதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
ரஷ்ய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேவையொன்றுக்கு ஜெலன்ஸ்கி வழங்கிய பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது ரஷ்ய படைகளிடம் சிறைபிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்வீர்களா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியையும் அவர் நிராகரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும். உக்ரைனின் அதிபர் ரஷ்யர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தலைப்பு செய்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ரஷ்யர்களிடம் சிறை பிடிக்கப்பட்டால், அது அவமதிப்பு ஆகும்.
போரின் தொடக்கத்தில் ரஷ்ய உளவு பிரிவினர் கீவ் நகரை தாக்க முயற்சித்தனர். எனினும், உக்ரைன் படைகள் அதனை முறியடித்தன. இதனால், பங்கோவா தெருவுக்குள்ளேயே ரஷ்ய படைகளால் நுழைய முடியவில்லை.
கீவுக்குள் நுழைவதற்கான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் உள்ளே நுழைந்து விட்டால், நிர்வாகம் அவர்களால் கைப்பற்றப்பட்டால், நாங்கள் இப்போது இங்கிருக்க முடியாது. ஆனால், ஒருவரையும் அவர்கள் சிறை பிடிக்க முடியாது. அந்தளவுக்கு படையினர் தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இறுதி வரையிலான போரை நாங்கள் நடத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்ய படைகளிடம் சிறைபிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்வீர்களா? என்ற கேள்வியை அவர் நிராகரித்துள்ளதுடன், நான் துப்பாக்கியால் என்னை சுட்டு கொள்ளமாட்டேன். திருப்பி சுடுவேன். அது நிச்சயம் என்று அவர் கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
