ரஷ்யாவில் தொடரும் பிரபலங்களின் மர்ம மரணங்கள் - பெண் பாதுகாப்பு அதிகாரியும் பலி
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்த பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினா 16வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் மெரினா யாங்கினாவின் உடலை பொதுமக்கள் பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மரினா யாங்கினாவின் உடலை கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் மரணங்கள்
உக்ரைன் உடனான ரஷ்ய போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரிமா யாங்கினா செயல்படுத்தி வந்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் மகரோவ், சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல முக்கிய பிரபலங்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.