செவெரோடொனட்ஸ்க் நகரை விட்டு வெளியேறுங்கள்! உக்ரைன் இராணுவம் உத்தரவு
உக்ரைன் இராணுவம் செவெரோடொனட்ஸ்க் எனும் பகுதியில் இருக்கும் தங்கள் வீரர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 122-ஆம் நாளாக தொடர்ந்து வரும் நிலையில்,செவெரோடொனட்ஸ்க் என்னும் நகரத்தில் தீவிரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
சமீப நாட்களாக ரஷ்ய படையினர் அந்நகரத்தையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஆக்கிரமித்து முன்னேறிக் கொண்டு வரும் நிலையில், அந்த நகரங்களில் இருக்கும் உக்ரைன் வீரர்களை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா
எனவே, குறித்த பகுதியில் மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும்,உயிரிழப்புகளை தவிர்க்க, அங்கிருந்து வெளியேறுவது தான் சரியானது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்கக்கூடிய இராணுவ நிலைகளுக்கு சென்று, அங்கிருந்து ரஷ்ய தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்று உக்ரைன் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.