உக்ரைன் - ரஸ்ய விவகாரம்! - பிரித்தானியா - அமெரிக்க தலைவர்களின் நம்பிக்கை
உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கான அனைத்து நம்பிக்கைகளை இன்னும் இழக்கவில்லை என்று அமெரிக்க மற்றும் பிரித்தானியா நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். எனினும் இன்னும் நிலைமை பலவீனமாகவே இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனும் சுமார் 40 நிமிடம் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலில் இந்த கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை உக்ரைன் எல்லையில் 100,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளபோதும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான திட்டங்களை ரஸ்யா தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இந்தநிலையில் இராஜதந்திரம் இன்னும் உள்ளது என்று ரஸ்யாவின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்று திங்களன்று அமெரிக்கா நேட்டோ வான் ரோந்துப் பணிகளில் பங்கேற்பதற்காக மேலும் எட்டு போர் விமானங்களை போலாந்துக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நேட்டோ இராணுவ பலத்தை அதிகரிக்க அடுத்த சில நாட்களில்
கூடுதலாக 3000 வீரர்கள் போலாந்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா
தெரிவித்துள்ளது.